Published : 12,Oct 2017 05:09 PM
டிடிவி தினகரன் மீது காவல்நிலையத்தில் புகார்

சபாநாயகரை மிரட்டியதாக டிடிவி தினகரன் மீது காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் தனபாலை மிரட்டும் வகையில் பேசியதாக டிடிவி தினகரன் மீது அரக்கோணம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 10ஆம் தேதி சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தினகரன், 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக சபாநாயகரை மிரட்டும் தொனியில் பேசியதாக அந்த புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிமுகவினர் அளித்துள்ள அந்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக அரக்கோணம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.