[X] Close

சூர்யாவின் சொடக்கு பாடலின்  டீசர் அக்டோபர் 16ல் வெளியீடு

sodakku-song-teaser-release-on-october-16

சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் இடம்பெறும் சொடக்கு பாடலின் டீசர் அக்டோபர் 16ம் வெளியிடப்பட உள்ளது. 

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா - கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள படம் `தானா சேர்ந்த கூட்டம்'. இப்படத்தின் இரண்டு பர்ஸ்ட் லுக் போஸ்டர் சூர்யா பிறந்த நாளான கடந்த ஜூலை 23 அன்று வெளியானது. அனிருத் இசையில் ஏற்கெனவே வெளியான "நானா தானா வீணா போன" என்ற வரிகளில் தொடங்கும் சிங்கிள் டிராக்கும் விரும்பி கேட்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அடுத்த, சொடக்கு பாடலின் டீசர் அக்டோபர் 16 தேதியன்று வெளியாக உள்ளது என படக்குழு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியான சற்று நேரத்திற்குள் ட்விட்டர் ட்ரெண்டில் இது இடம் பிடித்துள்ளது.

ஸ்டூடியோ கிரீன் மற்றும் சூர்யாவின் 2டி என்டர்டெயின்ட்மண்ட் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் செந்தில், சரண்யா பொன்வண்ணன், நந்தா, ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சத்யன், கோவை சரளா, ஆனந்தராஜ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close