Published : 12,Oct 2017 01:08 PM

''சந்தானத்திற்கு தண்டனை பெற்றுக் கொடுப்பேன்'' : வழக்கறிஞர் பிரேம் ஆனந்த் உறுதி

Lawyer-Prem-Anand-confirmed---I-will-get-punished-for-Santhanam-

நடிகர் சந்தானத்திற்கு சட்டப்படி தண்டனை பெற்று தருவேன் என அவரால் தாக்கப்பட்ட வழக்கறிஞர் பிரேம் ஆனந்த் தெரிவித்துள்ளார்

நடிகர் சந்தானத்தின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. சந்தானத்தால் தாக்கப்பட்ட வழக்கறிஞர் பிரேம் ஆனந்த் இன்னும் சிகிச்சை பெற்று வருகிறாரா என்பது குறித்து பதிலளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், இந்த வழக்கு மீதான விசாரணையை நாளை ஒத்திவைத்துள்ளது. 

இந்நிலையில், சமரசமின்றி நடிகர் சந்தானத்திற்கு சட்டப்படி தண்டனை பெற்று தருவேன் என்று வழக்கறிஞர் பிரேம் ஆனந்த் தெரிவித்துள்ளார். மேலும், பில்டர் சண்முகசுந்தரம் அழைத்ததால்தான் தாம் அங்கு சென்றதாகவும், மாறாக சந்தானம் எடுத்தவுடனேயே தன்னை தாக்க தொடங்கியதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். அதேபோல் நடிகர் சந்தானம் முன் ஜாமின் பெறும் வகையில், காவல்துறையினர் அவருக்கு கால அவகாசம் வழங்குவதாக வழக்கறிஞர் பிரேம் ஆனந்த் புகார் கூறியுள்ளார். 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்