Published : 11,Feb 2017 11:20 AM
ஜியோவின் ஹேப்பி ஹவர் ஆஃபர்...!

ரிலையன்ஸ் ஜியோவின் ஜியோ சினிமா செயலி புதிய அப்டேட்டுடன் வெளிவந்துள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது 4ஜி சேவைகளை ஆரம்பித்தது. இலவசமான 4ஜி சேவை மட்டுமில்லாமல், இலவச வாய்ஸ் கால், இலவச மெசேஜ், ஜியோ சினமா ஜியோ லைவ் டிவி போன்ற எண்ணற்ற பல சேவைகளை இலவசமாக வழங்கி வந்தது. இந்த சலுகைகள் வரும் மார்ச் மாதத்துடன் முடிவடையும் நிலையில் தற்போது ஜியோ பயனாளர்களுக்கு ஹேப்பி ஹவர் என்ற புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஜியோவின் ஜியோ சினிமா செயலி மூலம், பல மொழிகளில் உள்ள அனைத்து சினிமாவையும் பார்த்து ரசிக்க முடியும். அதுமட்டுமின்றி படங்களை டவுன்லோடு செய்யவும் முடியும். அதில் தற்போது ஜியோ வழங்கியுள்ள ஹேப்பி ஹவர் ஆஃபர் மூலம் அதிகாலை 2.00 மணி முதல் 5.00 மணி வரை இலவசமாக படங்களை டவுன்லோட் செய்து கொள்ளலாம். இதில் உடனடி டவுன்லோடு மற்றும் ஸ்மார்ட் டவுன்லோடு என இரண்டு ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
உடனடி டவுன்லோடு ஆப்ஷனை க்ளிக் செய்தால் படம் உடனடியாக டவுன்லோடு ஆகிவிடும். இரவு தூக்கத்தை தொலைத்து படங்களை டவுன்லோடு செய்ய முடியாது என்போருக்கு வசதியாக திரைப்படங்களை ஸ்மார்ட் டவுன்லோடு மூலம் இரவு உறங்கும் முன் டவுன்லோடு நேரத்தை செட் செய்து, திரைப்படத்தை தேர்வு செய்து விட்டால் காலை எழுந்த உடன் படம் டவுன்லோடு ஆகிவிடும்.