Published : 12,Oct 2017 03:30 AM

பாதுகாப்பற்ற நிலையில் மாணவர்கள்: இடிந்து விழுந்த அரசுப் பள்ளி

Government-school-damaged--students-suffered

கோவை நீலாம்பூர் அரசு நடுநிலை பள்ளியின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்ததால் உடனடியாக பள்ளியை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.

கோவை மாவட்டம் சூலூர் ஊராட்சி ஒன்றியத்திற்க்கு உட்பட்ட நீலாம்பூரில் அரசு நடுநிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. வழக்கம் போல பள்ளிக்கு மாணவர்கள் நேற்று சென்றனர். அங்கு 6-ஆம் வகுப்பறையை திறந்து பார்த்த போது, அதன் மேற்கூரை இடிந்து விழுந்து கிடந்தது. இதனை பார்த்து அதிர்ந்த பெற்றோர்கள், பள்ளியின் முன்பு கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. குழந்தைகள் பாதுகாப்பு இல்லாமல், இந்த கட்டத்தில் கல்வி பயில்வதாகவும் சற்று தாமதமாக இந்த விபத்து நடந்திருந்தால் பெரும் உயிர் சேதம் ஏற்பட்டு இருக்கும் என அதிர்ச்சியுடன் தெரிவித்தனர்.

பள்ளி இடியும் நிலையில் இருப்பதாகவும், அதனை சீரமைத்து தரும்படி, கடந்த மாதம் 19-ஆம் தேதி மாவட்ட கல்வி அலுவலருக்கு, அப்பள்ளி தலைமை ஆசிரியர் புகார் அனுப்பி இருந்தார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இந்த விபத்து ஏற்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பால முத்து, கட்டிடம் தரமற்ற நிலையில் இருப்பதை ஒத்துக்கொண்டார். 3 வகுப்பறைகளை தற்காலிகமாக மூடி வைக்கவும் உத்தரவிட்டார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்