[X] Close

ஆசியக் கோப்பை ஹாக்கி: வெற்றியுடன் இந்தியா தொடங்கியது

Clinical-India-maul-Japan-5-1-in-Asia-Cup-hockey-opener


பங்களாதேஷில் நடைபெறும் ஆசியக் கோப்பை ஹாக்கிப் போட்டியை இந்திய அணி வெற்றியுடன் தொடக்கியுள்ளது. 


Advertisement

ஆசியக் கோப்பை ஹாக்கி தொடர் பங்களாதேஷ் தலைநகர் தாக்காவில் இன்று தொடங்கியது. இதில் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி முதல் ஆட்டத்தில் ஜப்பான் அணியை எதிர்த்து விளையாடியது. இந்தப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி ஐந்துக்கு ஒன்று என்ற கோல்கள் கணக்கில் வெற்றியை வசப்படுத்தியது. இதில் இந்திய அணி சார்பில் ஹர்மன்பீரித் சிங் 2 கோல்களும், எஸ்.வி.சுனில், லலித் உபத்யாய், ரமன்தீப் சிங் ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர். நாளை மறுதினம் நடைபெறும் போட்டியில் இந்திய அணி பங்களாதேஷை எதிர்கொள்கிறது.

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close