Published : 11,Oct 2017 02:42 PM

சிவகார்த்திகேயன் ட்விட்டரில் வெளியிட்ட பாடல்

Sivakarthikeyan-release-a-song

‘ஒரு பக்க கதை’ திரைப்படத்தின் பாடல் ஒன்றை நடிகர் சிவகார்த்தி்கேயன் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

நடிகர் விஜய்சேதுபதிக்கு திருப்பத்தை கொடுத்த படம் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்’. இந்தப் படத்தின் இயக்குநரான பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம்தான் ‘ஒரு பக்க கதை’. நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம்  இந்தல் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். கோவிந்த மேனன் இசையில் உருவாகியுள்ள இப்படத்தை, கே.எஸ்.சீனிவாசன் தாயரித்துள்ளார். இந்தப் படத்தின் பாடல் ஒன்றை நடிகர் சிவகார்த்திகேயன் இன்று ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அத்துடன் காளிதாஸ் ஜெயராம், பாலாஜி தரணிதரன் மற்றும் படக்குழுவினருக்கும் அவர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்