ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலிக்கு பாலியல் தொல்லை

ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலிக்கு பாலியல் தொல்லை
ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலிக்கு பாலியல் தொல்லை

ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் ஹார்வே வெயின்ஸ்டீன் பாலியல் தொல்லை கொடுத்ததாக, பிரபல நடிகைகளான ஏஞ்சலினா ஜோலியும், பால்ட்ரொவும் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஹாலிவுட் நடிகைகள் பலரும்  திரைப்பட தயாரிப்பாளர் ஹார்வே வெயின்ஸ்டீன் மீது தொடர்ந்து பாலியல் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் திரை வாழ்க்கையில் அடியெடுத்து வைத்த ஆரம்ப காலத்தில் தங்களுக்கும் அவர் தொல்லை கொடுத்ததாக ஏஞ்சலினா ஜோலியும், பால்ட்ரொவும் தற்போது குற்றம்சாட்டியுள்ளது சர்ச்சையை அதிகரிக்க செய்துள்ளது. 

நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் வெயின்ஸ்டீனின் திரைமறைவு வாழ்க்கை குறித்த மர்மங்கள் வெளியாகி வந்ததை அடுத்து, அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் ஒவ்வொருவராக தற்போது உண்மைகளை அம்பலப்படுத்தி வருகின்றனர். இதனால் வெயின்ஸ்டீனின் மனைவி அவரை விட்டு பிரியப் போவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, அவரது மனைவி மிச்சேல் ஒபாமா ஆகியோரும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க தொடங்கி இருப்பதால், வெயின்ஸ்டீனுக்கு நெருக்கடி முற்றி வருகிறது.
 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com