ஊரை விட்டு ஒதுக்கி வைத்து கொலை மிரட்டல்: பாதிக்கப்பட்ட குடும்பம் ஆட்சியரிடம் மனு

ஊரை விட்டு ஒதுக்கி வைத்து கொலை மிரட்டல்: பாதிக்கப்பட்ட குடும்பம் ஆட்சியரிடம் மனு
ஊரை விட்டு ஒதுக்கி வைத்து கொலை மிரட்டல்: பாதிக்கப்பட்ட குடும்பம் ஆட்சியரிடம் மனு

ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே ஊரில் இருந்து ஒதுக்கிவிட்டு சிலர் கொலை மிரட்டல் விடுப்பதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே உள்ளது இலந்தைக்குளம் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் முத்துலெட்சுமி. அண்மையில் இந்த கிராமத்தில் திருவிழா நடந்தபோது கூம்பு வடிவ ஸ்பீக்கர் வைத்து பாடல் ஒளிபரப்பியதாகவும், அதுகுறித்து அந்த கிராமத்தில் இருந்த யாரோ காவல்நிலையத்திற்கு புகார் தெரிவித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் முத்துலெட்சுமியின் மகன் சிவகுமார் என்பவர் தான் அதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்ததாக கூறி அவரை அந்த ஊர் பிரமுகர்கள் தாக்கியுள்ளனர். காவல்நிலையத்தில் புகார் அளித்ததால் முத்துலெட்சுமி குடும்பத்தையும், அவரது தம்பி ராஜரெத்தினம் குடும்பத்தையும் ஊரைவிட்டு ஒதுக்கி வைப்பதாகவும், அவர்களுக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதிப்பதாகவும் அறிவித்துள்ளனர். இதனையடுத்து ஊருக்குள் யாரும் அவர்களிடம் பேசுவதில்லை. மேலும் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com