Published : 10,Oct 2017 02:26 PM

ஆசியக் கோப்பை ஹாக்கி தாகாவில் நாளை தொடக்கம்

Asian-Cup-Hockey-Match-Starts-Tomorrow

ஆசியக் கோப்பை ஹாக்கி போட்டி பங்களாதேஷ் தலைநகர் தாகாவில் நாளை தொடங்குகிறது. 

ஆசியக் கோப்பை ஹாக்கி தொடர் பங்களாதேஷ் தலைநகர் தாக்காவில் நாளை முதல் 22ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான், பங்களாதேஷ் ஆகிய அணிகள் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளன. பி பிரிவில் மலேசியா,தென்கொரியா, சீனா, ஓமன் ஆகிய அணிகள் உள்ளன. முதல் ஆட்டத்தில் இந்திய அணி, ஜப்பான் அணியை எதிர்த்து விளையாடுகிறது. நாளை நடைபெறும் மற்றொரு போட்டியில் பாகிஸ்தான் அணி, பங்களாதேஷ் அணியுடன் மோதுகிறது. ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா, லீக் சுற்றில் ஜப்பான் (அக். 11), பங்களாதேஷ் (அக். 13), பாகிஸ்தான் (அக். 15) ஆகிய அணிகளுடன் மோதுகிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்