
இலங்கை யாழ்ப்பாணம் சிறையிலுள்ள தமிழக மீனவர்கள் 12 பேரின் காவல் அக்டோபர் 24ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
தமிழக மீனவர்கள் கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். அப்போது நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்களை, அங்கிருந்து செல்லுமாறு கூறிய இலங்கை கடற்படையினர், மீனவர்கள் மீது தாக்குதலும் நடத்தினர். அத்துடன் இரண்டு படகுகளையும், அதிலிருந்த 12 ராமநாதபுரம் மீனவர்களையும் சிறைபிடித்தனர். இதையடுத்து கைது செய்தவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதைத்தொடர்ந்து யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் காவல் 2 முறை நீட்டிப்பு செய்யப்பட்டது. இந்நிலையில் 3வது முறையாக தமிழக மீனவர்களின் காவலை அக்டோபர் 24ஆம் தேதி வரை நீட்டித்து இலங்கையின் ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.