நவம்பர் 14 அன்று சந்தானம் படத்தின் இசை வெளியீடு

நவம்பர் 14 அன்று சந்தானம் படத்தின் இசை வெளியீடு
நவம்பர் 14 அன்று சந்தானம் படத்தின் இசை வெளியீடு

’சக்க போடு போடு ராஜா’ இசை வெளியீடு நவம்பர் 14 அன்று நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விடிவி கணேஷ் தயாரிப்பில் சந்தானம் நடித்துள்ள திரைப்படம் சக்கபோடு போடு ராஜா. இந்தப் படத்திற்கு சிம்பு இசையமைத்திருக்கிறார். ஜி.எல்.சேதுராமன் இயக்கியிருக்கிறார். சிம்புவின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானவர் சந்தானம். இன்று அவர் ஹீரோவாக நடிக்கும் படத்திற்கு சிம்பு இசையமைத்திருப்பதால் பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.இந்தப் படத்தின் இடம்பெறும் சக்கபோடு போடு ராஜா பாடல் சமீபத்தில்தான் படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் சிம்புவின் இசையில் யுவன் ஒரு பாடலை பாடியுள்ளார். அதைவிட பெரிய விஷயம் டி,ராஜேந்தரும் அவரது மனைவி உஷா ராஜேந்தரும் ஒரு பாடலை பாடியுள்ளனர். மகன் இசையில் அப்பா, அம்மா இருவருமே பாடியுள்ளனர். கலக்கு மச்சா டவுளத்துல பாடலை ரோகேஷ் எழுத அனிருத் பாடியுள்ளார்.

மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் விவேக் மற்றும் ரோபோ சங்கர், சஞ்சனா சிங்,விடிவி கணேஷ் ஆகியோர் நடிக்கின்றனர்.இப்படத்தின் இசை விழா நவம்பர் 14 தேதி  சத்யம் திரை அரங்கில் நடைபெறவுள்ளது.
 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com