Published : 11,Feb 2017 05:42 AM
புதுச்சேரி அதிமுக ஆதரவு யாருக்கு?

புதுச்சேரி அதிமுக ஆதரவு யாருக்கு என்பது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று அம்மாநில சட்டமன்ற அதிமுக கட்சித் தலைவர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
அதிமுக தலைமைக்கு எதிராக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குரல் கொடுத்துள்ள நிலையில், அவருக்கு அக்கட்சியைச் சேர்ந்த ஒரு பிரிவினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர்களைத் தொடர்ந்து நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரி எம்பிக்களான பி.ஆர்.சுந்தரம் மற்றும் அசோக்குமார் ஆகியோரும் இன்று நேரில் சந்தித்து தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.
இந்த நிலையில், புதுச்சேரி அதிமுகவின் ஆதரவு யாருக்கு என்பது தொடர்பாக அம்மாநில சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் அன்பழகன் தலைமையில் 4 எம்எல்ஏக்கள் இன்று ஆலோசனையில் ஈடுபட்டனர்.
அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அன்பழகன், புதுச்சேரி அதிமுகவின் ஆதரவு சசிகலாவுக்கா அல்லது ஓ.பன்னீர்செல்வத்துக்கா என்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார்.