திமுக பற்றி முரண்பாடாக பேசி வரும் தமிழிசை சவுந்தரராஜனுக்கு எல்லாம், தாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றும், தமிழகத்தில் டெங்கு ஆட்சி நடைபெறுவதாகவும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், " திமுக பற்றி தமிழிசை எப்போதும் முரண்பாடாகத் தான் கருத்து தெரிவித்துக் கொண்டிருப்பார். அதற்கெல்லாம் பதில் சொல்லி விளக்கத் தயாராக இல்லை. கெயில் திட்டமாக இருந்தாலும் எந்த திட்டமாக இருந்தாலும், விவசாய நிலம் பாதிக்கப்படக் கூடாது என்கிற நிலையில் தான் கொண்டுவர வேண்டும். ஏற்கனவே திமுகவின் அறிக்கையில் இது சொல்லப்பட்டுள்ளது. கருணாநிதியும் அதனைத்தான் கூறியுள்ளார். என்னவென்றால், மெயின் ரோட்டில், சாலையில் கொண்டுவருவதை வரவேற்கிறோம். மத்திய அரசு மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும். தமிழகத்தில் டெங்கு ஆட்சி தான் நடைபெற்று வருகிறது " என்றார்.
திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட கெயில் திட்டத்தை எதிர்த்துப் போராடுவோம் என்று திமுக இப்போது அறிவிப்பது முரண்பாடானது என்று பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Loading More post
கோவை: மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்!
சென்னையில் அனுமதியின்றி நினைவேந்தல் நடத்தியதாக திருமுருகன் காந்தி உட்பட 500 பேர் கைது
ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு: விவசாய நிலங்கள் பாதிப்படைவதாக விவசாயிகள் வேதனை!
ஐபிஎல்லில் ஜொலித்தவர்களுக்கு வாய்ப்பு! தென் ஆப்பிரிக்க டி20 தொடர் - இந்திய அணி அறிவிப்பு
கீழடி 8ஆம் கட்ட அகழாய்வில் இரும்பு உருக்காலை எச்சங்கள் கண்டெடுப்பு
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்