[X] Close

பெரும்பான்மை விவகாரம்: முதல்வருக்கு ஆளுநர் உத்தரவிடக்கோரிய மனு தள்ளுபடி

Pugalenthi-petition-rejected-in-chennai-high-court

தமிழக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வருக்கு ஆளுநர் உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் புகழேந்தி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

இதுதொடர்பாக புகழேந்தி தனது மனுவில், தமிழக சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 122  எம்எல்ஏக்கள் ஆதரவுடன் முதலமைச்சர் பழனிசாமி வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து தற்போது டிடிவி தினகரன் தரப்பு எம்எல்ஏக்கள் 19 பேர் முதலமைச்சர் பழனிசாமியை மாற்றக்கோரி ஆளுநரிடம் மனு கொடுத்துள்ளார். எனவே சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வருக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும். ஆளுநர் காலம் தாழ்த்தும் பட்சத்தில் அது குதிரை பேரத்திற்கு வழிவகுக்கும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதி முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இதுதொடர்பாக சட்டப்பேரவை உறுப்பினரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. அதனப்படிடையில் வழக்கு நடைபெற்று தீர்ப்பு வழங்கப்படும். அப்படியிருக்க சட்டப்பேரவை உறுப்பினர் அல்லாத புகழேந்தி தொடர்ந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close