Published : 09,Oct 2017 10:46 AM
ஓரினத் திருமணத்தை அங்கீகரிக்க கோரி ஆஸ்திரேலியா முழுவதும் வாக்கெடுப்பு

ஆஸ்திரேலியாவில் ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணத்தை சட்டமாக்கக் கோரி அந்நாடு முழுவதும் நடந்து வரும் பொதுவாக்கெடுப்புக்கு ஒரு சில அமைப்புகளிடம் இருந்து ஆதரவு பெருகி வருகிறது.
ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணத்துக்கு ஆஸ்திரேலிய அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதைத் தொடர்ந்து அதற்கு சட்ட அங்கீகாரம் வழங்கக் கோரி கடந்த மாதம் 15 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அதிகாரப்பூர்வமற்ற வகையில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. அடுத்த மாதம் 12 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ள நிலையில், ஓரினத் திருமணத்துக்கு ஆதரவாக சில அமைப்புகளும் தற்போது ஆதரவு குரல் எழுப்பியுள்ளன.