[X] Close

சீன ஓபன் டென்னிஸ்: பிரான்ஸ் வீராங்கனை சாம்பியன்

China-open-tennis

சீன ஓபன் டென்னிஸின் மகளிர் ஒற்றையர் பிரிவில் பிரான்ஸ் வீராங்கனை கேரலின் கார்சியா சாம்பியன் பட்டம் வென்றார். 

சீனாவின் பெய்ஜிங் நகரில் சீன ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதன் மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப்போட்டியில், முதல் நிலை வீராங்கனையான ரூமேனியாவின் சிமோனா ஹாலப்பை எதிர்த்து, கேரலின் கார்சியா விளையாடினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், முதல் செட்டை 6-4 என கைப்பற்றிய கார்சியா, இரண்டாவது செட்டை 7-6 என்ற கணக்கில் போராடி வென்றார். இதன்மூலம் பிரான்ஸ் வீராங்கனையான கேரலின் கார்சியா சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார்.


Advertisement

Advertisement
[X] Close