[X] Close

அரியவகை மணல் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது

Ramanathapuram-Sand-theft

சாயல்குடி அருகே அரியவகை மணல் திருட்டில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். 


Advertisement

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள கன்னிராஜபுரம் பகுதியின் தரவை நிலங்களில் உயர்ரக மணலை சட்டவிரோதமாக இரவு நேரங்களில் சிலர் திருடுவதாக சிறப்பு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதிக்கு ரகசியமாக ரோந்துப்பணி சென்ற சிறப்புப் போலீசார், மணல் திருட்டில் ஈடுபட்டிருந்த இரண்டு பேரை கைது செய்து சாயல்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அத்துடன் மணலுடன் இருந்த இரண்டு டிராக்டர்களையும் பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட சாயல்குடி போலீசார், வழக்குப்பதிவு பதிவு செய்து இருவரையும் முதுகுளத்தூர் கிளைச்சிறையில் அடைத்தனர். 


Advertisement

Advertisement
[X] Close