[X] Close

தமிழகத்தில் காய்ச்சல்களுக்கு 85 பேர் உயிரிழப்பு

Fever-Death-increase-in-Tamilnadu


தமிழகத்தில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்களுக்கு இதுவரை 85 பேர் உயிரிழந்திருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் பல்வேறு காய்ச்சல்களுக்கு சிகிச்சை பெற்று வருவோரை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சந்தித்து நலம் விசாரித்தார். பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் அவர் கேட்டறிந்தார். பின்னர் நகரின் வெவ்வேறு பகுதிகளுக்கு சென்று, காய்ச்சல்களை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை மேற்கொண்டுவரும் பணிகளை ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசியவர், தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 85 பேர் உயிரிழந்திருப்பதாகவும், காய்ச்சல்களால் பாதிக்கப்பட்ட சுமார் 10 ஆயிரம் பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிவிட்டதாகவும் ராதாகிருஷ்ணன் கூறினார்.

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close