[X] Close

மதுபோதையில் அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுநர் கைது

Drunk-Drive-TNGovt-bus-Driver-Arrest-in-Virudhachalam

விருத்தாசலத்தில் குடிபோதையில் அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.


Advertisement

கடலூர் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் இருந்து அரசு பேருந்து இன்று பயணிகளுடன் விருத்தாசலத்திற்கு புறப்பட்டது. ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து செல்வதை கண்ட சில பயணிகள் அடுத்த நிறுத்தத்தில் இறங்கிவிட்டனர். பூவனூர் பேருந்து நிறுத்தத்தில் ஓட்டுநர் நினைவிழந்து பேருந்து நின்றது. ஓட்டுநர் உடன் பயணிகள் வாக்குவாதம் செய்தனர். அப்போது ஓட்டுநர் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. மேலும் தொடர்ச்சியாக இரண்டு நாள் ஓய்வு இல்லாமல் பணிபுரிந்து இன்று மூன்றாவது நாளாக பணிபுரிவதாக கூறப்படுகிறது. ஓட்டுநர் வேல்முருகனை மங்கலம்பேட்டை காவல்துறையினர் கைது செய்தனர்.


Advertisement

Advertisement
[X] Close