Published : 08,Oct 2017 10:06 AM

ஏழைகளுக்கு கட்டுப்படியாகக் கூடிய செலவில் மருத்துவம்: பிரதமர் மோடி

Narendra-Modi-in-Gujarat

ஏழைகளுக்கு கட்டுப்படியாகக் கூடிய செலவில் மருத்துவ சிகிச்சை கிடைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமராகப் பதவியேற்ற பின்னர், முதன்முறையாக குஜராத்தில் உள்ள தனது சொந்த ஊரான வத் நகருக்கு சென்ற அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அங்கு அமைக்கப்பட்டுள்ள மருத்துவமனையை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய மோடி, மருத்துவர்களாலோ அல்லது தரமான உணவுகளாலோ நல்ல சுகாதாரத்தை தர முடியும் என்று கூறிவிட முடியாது என்று குறிப்பிட்டார். ஆனால், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருந்தால் உடல்நலனை பேணிக்காக்க முடியும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்