Published : 07,Oct 2017 08:54 AM

மருத்துவமனையில் கணவர் நடராஜனிடம் நலம் விசாரித்தார் சசிகலா

sasikala-meets-husband-natarajan

பரோலில் வெளிவந்துள்ள சசிகலா, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கணவர் எம்.நடராஜனை சந்தித்து நலம் விசாரித்தார்.

கணவரை சந்திக்க பெங்களூரு சிறையில் இருந்து 5 நாட்கள் பரோலில் வந்துள்ள சசிகலா, சென்னை தியாகராய நகரில் உள்ள இளவரசியின்‌‌ மகள் கிருஷ்ணப்பிரியா
வீட்டில் தங்கியுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தனது கணவரைப் பார்ப்பதற்காக, சென்னையை அடுத்துள்ள பெரும்பாக்கத்திற்கு இன்று காலை
சசிகலா சென்றார். கிருஷ்ணப்பிரியா அவரது சகோதரர் விவேக், சசிகலாவின் சகோதரர் திவாகரன் மகன் ஜெய் ஆனந்த் உள்ளிட்ட உறவினர்கள் சிலரும் சசிகலாவுடன் சென்றனர்.

சசிகலா மருத்துவமனைக்கு செல்லும் வழியிலும், மருத்துவமனைக்கு வெளியேயும் அவரது ஆதரவாளர்கள் முழக்கங்களை எழுப்பி வரவேற்பு அளித்தனர். இந்தக்
காட்சி அனைத்தும் காவல்துறை சார்பில் பதிவு செய்யப்பட்டது. மருத்துவமனைக்குச் சென்றதும், சசிகலா கண்ணீர் மல்க, கணவரிடம் நலம் விசாரித்ததாக
கூறப்படுகிறது. பின்னர் பிற்பகல் 2 மணியளவில், மருத்துவமனையிலிருந்து, தியாகராய நகர் புறப்பட்டுச் சென்றார் சசிகலா. பரோலில் வெளிவந்துள்ள சசிகலாவுக்கு, அரசியல் ரீதியாக யாரையும் சந்திக்கக்கூடாது, பேட்டி அளிக்கக்கூடாது என்பன உள்ளிட்ட கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்