[X] Close

குஜராத்தில் பிரதமர் மோடி: தேர்தலையொட்டி சுற்றுப்பயணம்

PM-Modi-in-Gujarat

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக குஜராத் சென்றுள்ளார். ஜாம் நகருக்குச் சென்ற அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.


Advertisement

பிரதமர் மோடி தன் சொந்த மாநிலமான குஜராத்திற்கு இரண்டு நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். ஒரே மாதத்தில் 2-ஆவது முறையாக குஜராத் சென்றுள்ள
பிரதமர் மோடி அங்கு பல்வேறு நலத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். துவார்காதீஷ் கோயிலுக்கு வருகை தந்த மோடி, அங்கு வழிபாடு முடித்து விட்டு,
துவாரகாவில் 4 வழிப்பாதை தொங்கு பாலத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். இதுதவிர 4 வழிச்சாலையான போர்பந்தர்- துவாரகா சாலைக்கும் அடிக்கல்
நாட்டவிருக்கிறார்.

குஜராத்தில் விரைவில் தேர்தல் வரவிருப்பதையொட்டி, அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி பல பொதுக்கூட்டங்களிலும் பேச ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.


Advertisement

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close