[X] Close

ஆஸி. கேப்டன் ஸ்மித் காயம்: நாடு திரும்புகிறார்

Steven-Smith-returns-home-with-injury--Warner-to-lead

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கேப்டன் ஸ்மித் காயம் அடைந்ததை அடுத்து, துணை கேப்டன் டேவிட் வார்னர் டி20 போட்டித்தொடருக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.


Advertisement

ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரை 4-1 என்ற கணக்கில் இந்தியா வென்ற பின், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை கைப்பற்றும் முனைப்பில்ஆஸ்திரேலிய அணி உள்ளது. இந்நிலையில் அந்த அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் காயம் காரணமாக ஆஸ்திரேலியாதிரும்புகிறார். கடைசி ஒரு நாள் போட்டியின் போது, பந்தை பிடிக்க முயற்சிகையில் ஸ்மித் கீழே விழுந்தார். அப்போது அவரதுதோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அது இன்னும் சரியாகாததால் இந்த தொடரில் அவர் விளையாட மாட்டார். பந்தை பிடிக்கவோ,எறியவோ அவரால் முடியவில்லை என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இதையடுத்து அவர் ஆஸ்திரேலியாதிரும்புகிறார். அவருக்கு பதில் ஸ்டோயினிஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். துணை கேப்டன் டேவிட் வார்னர் கேப்டன் பொறுப்பைக் கவனிப்பார்.
முதல் போட்டி, ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்றிரவு நடக்கிறது.


Advertisement

Advertisement
[X] Close