அடுத்த இரு நாட்களில் வடதமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒருசில இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
வளிமண்டலத்தின் கீழடுக்குப் பகுதிகள், தெற்கு கர்நாடகா மற்றும் வடதமிழகத்தை ஒட்டியுள்ள பகுதியில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் தெற்கு ஆந்திரா முதல் தென் தமிழகம் வரை குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்காரணமாக, அடுத்த இரு நாட்களில் வடதமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒருசில இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல் மேற்கு மாவட்டங்கள் மற்றும் வடமேற்கு மாவட்டங்களிலும், சென்னையைப் பொறுத்தவரை ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளாவை உள்ளடக்கிய பகுதிகளில் 30 லிருந்து 37 சென்டி மீட்டர் வரை வடகிழக்கு பருவமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
Loading More post
குரூப் 2 தேர்வுகளுக்கான விடைகளை வெளியிட்டது TNPSC! இந்த லிங்க்-ல் அறியலாம்!
ஈ சாலா கப் சாத்தியமாகுமா? டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங் தேர்வு!
லடாக்கில் வாகன விபத்து: 7 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
சொத்துக்குவிப்பு வழக்கு: ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சவுதாலாவுக்கு சிறை தண்டனை
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!