ஆர்.எஸ்.எஸ்.தலைவர் சென்ற கார் விபத்தில் சிக்கியது

ஆர்.எஸ்.எஸ்.தலைவர் சென்ற கார் விபத்தில் சிக்கியது
ஆர்.எஸ்.எஸ்.தலைவர் சென்ற கார் விபத்தில் சிக்கியது

ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத் சென்ற கார் இன்று காலை விபத்துக்குள்ளானது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், விருந்தாவனில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக, டெல்லியில் இருந்து ஒரு காரில் சென்றார். காருக்கு முன்னும் பின்னும் பாதுகாவலர்களின் கார்கள் சென்றன. மதுரா மாவடத்தில் யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் இன்று காலை 8.30 மணியளவில் சென்றுகொண்டிருந்த போது, மோகன் பகவத்தின் பாதுகாவலர்கள் வந்த கார், அவர் கார் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் மோகன் பகவத் சென்ற காரின் முன் பகுதி சேதம் அடைந்தது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.  இதையடுத்து மாற்று வாகனத்தில் அவர் அனுப்பி வைக்கப்பட்டார். இதுபற்றி சுரீர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com