சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள சசிகலாவுக்கு நிபந்தனைகளுடன் 5 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது.
கணவர் நடராஜன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சசிகலா பரோல் கேட்டு பரப்பன அக்ரஹாரா சிறை அதிகாரியிடம் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் அவர் சமர்ப்பித்துள்ள ஆவணங்கள் சென்னையைச் சேர்ந்தவையாக இருந்தன. இதையடுத்து, கர்நாடக போலீஸார் கேட்டுக்கொண்டபடி, அவற்றை சரிபார்க்கும் பணியில் சென்னை போலீஸார் ஈடுபட்டனர். அதில், சசிகலா தெரிவித்திருந்த முகவரி, மருத்துவமனை நிலவரம், தங்குமிடம் என பல்வேறு தகவல்களைக் கொண்ட ஆவணங்களை போலீஸார் சரிபார்த்தனர்.
சென்னை காவல்துறையினரும் சசிகலா பரோலுக்கு தடையில்லா சான்று வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சசிகலாவுக்கு கடும் நிபந்தனைகளுடன் 5 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. சசிகலா 15 நாட்கள் பரோல் கேட்டிருந்த நிலையில் அவருக்கு கர்நாடக பரப்பன அக்ரஹார சிறைத்துறை நிர்வாகம் 5 நாட்கள் பரோல் வழங்கியுள்ளது.
Loading More post
13.11 விநாடிகள்.. 100மீ தடை தாண்டும் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை சாதனை!
’அவரிடம் நியாயம் இருந்தது’ - நன்றி சொன்ன பேரறிவாளனுக்கு கிடார் பரிசளித்த திருமாவளவன்!
“போலீஸ்கூட ஹெல்மெட் அணியாமல் செல்கிறார்களே?”-இணையத்தில் குவிந்த பதிவுகள்..பதிலளித்த ஆணையர்
ப்ரீபெய்ட் கட்டணத்தை மீண்டும் உயர்த்துகிறது ஏர்டெல்! அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்
அயோடின் இல்லையென்றால், ’மனித உபயோகத்திற்கு உப்பு ஏற்றதல்ல’ என அச்சிடுக - மா. சுப்ரமணியன்
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்