[X] Close

பனிமூட்டத்தால் பரவசமடையும் சுற்றுலா பயணிகள்

Climate-Changed-in-Kodaikanal

தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான கொடைக்கானலில் தற்போது நிலவிவரும் கால நிலையால் சுற்றுலா பயணிகள் ஆனந்தமடைந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில், கடந்த மாதம் பெய்த தொடர் மழை, சற்றும் ஓய்ந்த நிலையில், அக்டோபர் மாதத்தில் முதல் வார இறுதியில் மீண்டும் மழை துவங்கியுள்ளது. பகல் முழுவதும் பனிமூட்டத்துடன் காணப்படும் நிலையில், மாலைக்கு பின்னர் சாரல் மழை பெய்யத் தொடங்குகிறது. பகலிலும் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. இதற்கிடையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


Advertisement

Advertisement
[X] Close