சென்னை பெரம்பூரில் பெண் வேடத்தில் வந்து, பெண் மருத்துவரை சரமாரியாக வெட்டிய நபர் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோயம்பேட்டில் கருத்தரிப்பு மையம் நடத்திவரும் ரம்யா என்ற மருத்துவர், வழக்கம்போல பணி முடித்து பெரம்பூர் படேல் சாலையில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்புக்கு திரும்பினார். காரைவிட்டு இறங்கி வீட்டுக்கு செல்ல முயன்ற ரம்யாவை அங்கு மறைந்திருந்த பர்தா அணிந்த நபர், திடீரென பாய்ந்து அரிவாளால் வெட்டினார். ரம்யாவின் அலறல் சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தபோது, பர்தா அணிந்த நபர் பைக்கில் தப்பி ஓடினார். பலத்த காயமடைந்த ரம்யா, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ரம்யாவின் கணவரும் மருத்துவராக இருக்கிறார்.
இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு செம்பியன் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக தாமஸ் என்ற மருத்துவர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மருத்துவர் தாமசிடம் பணியாற்றி வந்த ரம்யா, கோயம்பேட்டில் தனியாக மருத்துவமனையை தொடங்கினார். இதன் காரணமாக எழுந்த தொழில் போட்டியால் மருத்துவர் தாமஸ் கூலிப்படையினரை ஏவி கொலை முயற்சியில் ஈடுபட்டதாக காவல்துறை தரப்பில் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மருத்துவர் ரம்யா சிறந்த கருவுறு மையத்திற்கான விருதையும், சிறந்த மருத்துவருக்கான விருதையும் பெற்றிருக்கிறார்.
Loading More post
உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோல் விற்கும் நாடு எது?
குரங்கு அம்மை அறிகுறியா? நிச்சயம் இதனை செய்யுங்கள் - சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி உத்தரவு
முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ்.. அதிக முறை கடைசி இடத்தை பிடித்த அணி எது?
செம்மலை, ஜெயக்குமார்.., மாநிலங்களவை அதிமுக வேட்பாளர்கள் தேர்வில் தொடரும் இழுபறி!
2 வருடமாக அவதிப்பட்ட மகன்; தியாக ரூபத்தில் வந்த தாய் - ரோபோ உதவியுடன் மருத்துவர்கள் சாதனை
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்