உள்ளாட்சித் தேர்தல் தாமதம் ஏன் என சென்னை உயர்நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பியுள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு, நீதிபதிகள் நூட்டி ராமமோகனராவ், எஸ்.எம்.சுப்பிரமணியம் ஆகியோர் முன் இன்று விசாரணைக்கு வந்தது. தேர்தல் எப்போது நடைபெறும் என்பதை ஏன் நேரடியாகச் சொல்லமுடியவில்லை, தேர்தல் நடத்துவதில் ஏன் தாமதம் என தேர்தல் ஆணையத் தரப்பு மூத்த வழக்கறிஞர் பி.குமாரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த வழக்கறிஞர் குமார், தேர்தல் தாமதத்துக்கான காரணத்தை விளக்கினார். அப்போது, தேவைப்படும் உதவிகளை நிறைவேற்றித்தர தமிழக அரசுக்கு தேர்தல் ஆணையம் சில கோரிக்கைகளை முன்வைத்ததாகவும், அதில் சில கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டதாகவும், சில கோரிக்கைகளை அரசு இன்னும் நிறைவேற்றவில்லை என்றும் தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட திமுக தரப்பு வழக்கறிஞர் வில்சன், மாநில தேர்தல் ஆணையம் என்பது தன்னிச்சையான அமைப்பு என்றும், மாநில அரசின் உதவிக்காக காத்திருப்பதாகவும், அரசு ஒத்துழைக்கவில்லை என்றும் கூறுவதை ஏற்க முடியாது என்றும் தெரிவித்தார். இதையேற்ற நீதிபதிகள், தேர்தல் ஆணையம் என்பது மாநில அரசின் உத்தரவின்படி செயல்படுவதாக இருந்தால், தேர்தல் ஆணைய அமைப்பை உண்டாக்கியதன் நோக்கம் சிதைந்துவிடும் எனக் கூறினர். பின்னர் வழக்கை பிப்ரவரி 14ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Loading More post
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
``எந்த வகுப்புக்கு எப்போது பள்ளி திறப்பு?”- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில்
கோயம்பேடு சந்தை: பெட்ரோல், டீசல் விலை குறைவால் சரிந்தது தக்காளி விலை! இன்றைய நிலவரம் என்ன?
காஷ்மீரில் பட்டப்பகலில் போலீஸ் காவலர் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் அட்டூழியம்
மில்லரின் 'கில்லர்' பேட்டிங் - ராஜஸ்தானை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறிய குஜராத்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!