[X] Close

புதிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று பதவியேற்பு

Banwarilal-Purohit-To-Be-Sworn-In-As-Tamil-Nadu-Governor-Today

தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோகித் இன்று காலை 9.30 மணிக்கு பதவியேற்கிறார்.

ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விழாவில் அவருக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். விழாவில் பங்கேற்கும்படி எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால் அவரும் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, நேற்று சென்னை வந்த பன்வாரிலால் புரோகித்திற்கு, விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. கொட்டும் மழையில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் உள்ளிட்டோர் புதிய ஆளுநரை வரவேற்றனர். முன்னதாக, பொறுப்பு ஆளுநர் பதவியிலிருந்து விடைபெற்ற வித்யாசாகர் ராவுக்கு பிரியாவிடை அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதிலும், முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.


Advertisement

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close