[X] Close

பாக்.கில் ஐ.எஸ். அட்டாக்: பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு

Suicide-bomber-strikes-Shiite-shrine-in-Pakistan--killing-20

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் நடத்தப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. 25 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

பலுசிஸ்தானில் உள்ள ஷியா பிரிவு வழிபாட்டுத்தலத்தில் இந்த கொடுமையான தாக்குதல் அரங்கேற்றப்பட்டது. தனது உடலில் வெடிகுண்டுகளைக் கட்டியபடி வந்த தற்கொலைப் படை பயங்கரவாதி வழிபாட்டுத்தலத்திற்குள் வேகமாக நுழைய முயன்றான். அப்போது காவலர் ஒருவர் அவனை தடுத்து நிறுத்தியபோது அவன் தனது உடம்பில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்தான். தாக்குதலில் 25க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close