[X] Close

எம்.எல்.ஏக்களுக்கு உணவு வழங்குவதை உறுதி செய்யுங்கள்: உயர்நீதிமன்றம்

To-ensure-the-supply-of-food-to-MLAs--Chennai-Highcourt

தனியார் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏக்களுக்கு உணவு வழங்குவதை உறுதி செய்யுமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தொகுதி எம்.எல்.ஏ கீதாவை மீட்கக் கோரி அவரது உறவினர் பீரித்தா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூரில் உள்ள தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள 131 எம்.எல்.ஏக்களை மீட்க வேண்டும் எனக் கூறி ட்ராபிக் ராமசாமி உள்ளிட்டவர்களும் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்களை நீதிபதிகள் சி.டி.செல்வம் மற்றும் மதிவாணன் விசாரித்தனர். மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், 131 எம்.எல்.ஏக்களும் சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை மீட்க காஞ்சிபுரம் எஸ்.பிக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.131 பேரில் 20 பேர் உணவு, நீர் உட்கொள்ளாமல் மறுத்து வருவதாகவும் வாதிட்டனர்.


Advertisement

அரசுத் தரப்பில் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ராஜரத்தினம், அதிமுக எம்.எல்.ஏக்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் காவல்துறையில் விளக்கம் பெற்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும் எனவும் கூறினார். இதனை அடுத்து தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏக்களுக்கு உணவு வழங்குவதை உறுதி செய்யுமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.எம்.எல்.ஏக்களின் நிலை குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தகவல் அளிக்க வேண்டும் எனக் கூறி விசாரணையை வரும் திங்கட்கிழமைக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close