கொட்டும் மழைக்கிடையே சென்னை வந்தார் புதிய ஆளுநர்: முதலமைச்சர் வரவேற்பு

கொட்டும் மழைக்கிடையே சென்னை வந்தார் புதிய ஆளுநர்: முதலமைச்சர் வரவேற்பு
கொட்டும் மழைக்கிடையே சென்னை வந்தார் புதிய ஆளுநர்: முதலமைச்சர் வரவேற்பு

தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பன்வாரிலால் புரோஹித் பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே சென்னை வந்தார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர் விமான நிலையத்தில் ஆளுநருக்கு வரவேற்பு அளித்தனர். கொட்டும் மழைக்கு இடையே சென்னை வந்த பன்வாரிலாலை அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், டிஜிபி ஆகியோரும் நேரில் வரவேற்றனர்.

புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பன்வாரிலால் புரோஹித்திற்கு காவல்துறை சார்பில் அணி வகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து விமான நிலையத்தில் இருந்து ஆளுநர் மாளிகைக்கு காரில் சென்றடைந்தார்.

மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பன்வாரிலால் புரோஹித், தமிழக ஆளுநராக நாளை பதவியேற்கிறார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நாளை காலை 9.30 மணி அ‌ளவில் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com