
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் திருமண நிச்சயதார்த்தம் நொய்டாவில் நேற்று நடந்தது.
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர்குமார். தோனியை போல எப்போதும் கூலான கிரிக்கெட்டர். இவர் கடந்த 5 மாதத்துக்கு முன் சமூக வலைத்தளத்தில் ஒரு பாதி புகைப்படத்தை பதிவிட்டார். அதில் என்னோடு டின்னர் சாப்பிடும் மற்றொருவர் யார் என்ற கேள்வியோடு முடித்திருந்தார். பதில் விரைவில் என்றும் கூறியிருந்தார்.
ரசிகர்கள் பலர் தங்கள் கற்பனைக்கு ஏற்றவாறு ஒவ்வொருவரையாக சொல்லிவந்தனர். இந்நிலையில் புவனேஷ்வர்குமாரே அந்த முழு புகைப்படத்தையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். ’அது, நுபுர் நாகர். எனது பெட்டர் ஹாஃப்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் நேற்று மாலை முடிந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். டிசம்பரில் இவர்கள் திருமணம் நடக்கிறது.