புதிய பார்வை இதழின் ஆசிரியர் நடராஜனுக்கு, உறுப்பு மாற்று சிகிச்சை அளித்ததில் விதிமீறல்கள் இருப்பதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நடராஜனுக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. தஞ்சாவூரில் இருந்து இளைஞர் ஒருவரால் உறுப்புகள் தானமாக கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் இதில் உறுப்பு மாற்று விதிகள் பல மீறப்பட்டுள்ளன. இது பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது. எனவே உடனடியான இந்த சந்தேகங்கள் தீர்க்கப்படவேண்டும் என்பது மட்டுமில்லாமல் இதுகுறித்து விசாரிக்கப்பட வேண்டும்” என்றார்.
மேலும், “எந்த மருத்துவமனை ஒருவர் மூளைச்சாவு அடைந்துவிட்டார் என்று அறிவிக்கிறதோ அந்த மருத்துவமனைக்குதான் அவருடைய உறுப்புகளை வாங்குவதற்கு உரிமை உள்ளது. மிகவும் ஏழ்மை நிலையில் இருக்கும் இளைஞர், எப்படி குளோபல் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படுகிறார். அதற்கான செலவை யார் கொடுத்தது. எனவே அதுகுறித்து தீவிரமாக விசாரிக்கப்பட வேண்டும்” என்று தமிழிசை கூறினார்.
Loading More post
8வது நாள், 20 டிக்கெட்டுகள், ரூ.4,420 வசூல்.. கங்கனாவின் ‘தாகத்’ படத்துக்கு சோதனை!
உச்சம் தொட்ட பெட்ரோல் விலை.. பாகிஸ்தான் அரசு எடுத்த புதிய முடிவு.. மகிழ்ச்சியில் மக்கள்!
‘கோடையை சமாளிக்க உதவும்‘ - 20 நாட்களில் சென்னை வந்தடைந்த 1 டி.எம்.சி கிருஷ்ணா நதி நீர்
’கருணாநிதி சிலை திறக்க மிகப் பொருத்தமானவர் வெங்கையா நாயுடு’ - முதல்வர் ஸ்டாலின்
பான் இந்திய டாப் ’10’ சினிமா நட்சத்திரங்கள்.. முதலிடத்தில் ‘மாஸ்டர்’ ஹீரோ!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி