Published : 04,Oct 2017 03:41 PM
மக்கள் பாடம் கற்றுத் தருவார்கள்: முதலமைச்சர் பழனிசாமி

தமிழக அரசு கொண்டு வரும் மக்கள் நலத் திட்டங்களுக்கு குறுக்கே நிற்பவர்களுக்கு மக்களே பாடம் கற்றுத் தருவார்கள் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கரூரில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவுக்காக கரூரில் பிரம்மாண்ட அரங்கம் அமைக்கப்பட்டிருந்தது. எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் புகைப்படங்கள், பதிக்கப்பட்ட அரங்கத்தில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் அமைச்சர்கள், எம்.பிக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே பொய்களை அவிழ்த்து விடுவதாக விமர்சித்தார். இந்த ஆட்சியை கலைத்து விடலாம் என சிலர் கனவு காண்பதாகக் கூறிய முதலமைச்சர், அவர்களது எண்ணம் ஈடேறாது என்றார். மேலும் கரூர் எம்எல்ஏவாக இருந்த செந்தில்பாலாஜியின் செயலால் மாவட்ட மக்கள் வேதனை அடைந்துள்ளதாக முதலமைச்சர் கூறினார்.