வங்கதேசத்துக்கு ரோஹிங்யா முஸ்லிம்கள் தொடர்ந்து இடம்பெயர்ந்து வரும் நிலையில், மியான்மர் எல்லைப் பகுதி திடீரென புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.
மியான்மர் அரசின் அடக்குமுறை காரணமாக அந்நாட்டின் ராகினே மாகாணத்தில் வசித்து வந்த 5 லட்சத்துக்கும் மேற்பட்ட ரோஹிங்யா இன முஸ்லிம்கள் வங்கதேசத்தில் அடைக்கலம் புகுந்துள்ளனர். தங்களது வீடுகளை அடித்து நொறுக்கி, முழு கிராமத்தையும் மியான்மர் ராணுவத்தினர் தீயிட்டு கொளுத்துவதாக வங்கதேசம் வந்து சேர்ந்த அகதிகள் அச்சத்துடன் தெரிவித்து வருகின்றனர்.
இந்தச் சூழலில் வங்கதேசம் அருகே மியான்மருக்கு உட்பட்ட எல்லைப் பகுதி திடீரென புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. அங்குள்ள ரோஹிங்யா முஸ்லிம்களின் வீடுகள் தீயிட்டு கொளுத்தப்பட்டதே, அந்த புகை மண்டலத்துக்கு காரணமாக இருக்கலாம் என சில அமைப்புகள் சந்தேகம் தெரிவித்துள்ளன. எனினும் உண்மை நிலவரம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இதன் காரணமாக மியான்மர், வங்கதேச எல்லைப் பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது.
Loading More post
'அவர் காட்டுத்தனமாக பந்துகளை எறிவார்' - பாக். பவுலர் குறித்து சேவாக் பேச்சு! யார் அவர்?
விசா முறைகேடு விவகாரம் - கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டரை டெல்லி அழைத்துச் செல்ல அனுமதி!
அஜித்தின் ‘ஆலுமா டோலுமா‘ பாடலுக்கு மெஹந்தி விழாவில் நடனமாடிய ஆதி, நிக்கி கல்ராணி
திருமணப் பரிசாக வந்த பொம்மை வெடித்து சிதறியதில் மணமகன் படுகாயம்! பழிவாங்கல் நடவடிக்கையா?
இந்தியாவில் வெளியானது விவோ எக்ஸ்80! சிறப்பம்சங்கள் என்னென்ன?
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்