Published : 04,Oct 2017 06:13 AM
காயங்களுடன் இறந்து கிடந்த அரசு பேருந்து ஓட்டுனர்: கொலையா என விசாரணை

அரியலூர் கே.கே.நகர் குடியிருப்பு பகுதியின் சாலை ஓரத்தில், அரசு பேருந்து ஓட்டுநர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அரியலூர் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் சுந்தரவேல். இவர் திருச்சி அரசு விரைவு பேருந்து ஓட்டுனராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் அரியலூர் கே.கே.நகர் குடியிருப்பு பகுதியின் சாலை ஓரத்தில், சுந்தரவேல் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். மேலும் 100 மீட்டர் நீளத்திற்கு சாலையில் ரத்தம் தோய்ந்த டயரின் தடம் இருந்ததாகவும் விசாரணையில் கூறப்படுகிறது. இதையடுத்து ஓட்டுநரின் இறப்பு குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.