டிரெண்டிங்
‘கொசுக்களிடமும் மாமூல்’: விஜயபாஸ்கரை கிண்டல் செய்த ஸ்டாலின்
‘கொசுக்களிடமும் மாமூல்’: விஜயபாஸ்கரை கிண்டல் செய்த ஸ்டாலின்
டெங்கு விவகாரத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை கேலி செய்யும் விதமாக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின், “எப்படி குட்கா விவகாரத்தில் அமைச்சர் மாமூல் வாங்கினாரோ, அதேபோல் டெங்கு பரப்பும் கொசுக்களிடமும் அமைச்சர் மாமூல் வாங்கிவிட்டு டெங்குவை பரப்பிவிடுகிறார்” என கிண்டல் செய்தார்.
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலுக்கு பலி எண்ணிகை அதிகரித்து வரும் நிலையில், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில் விஜயபாஸ்கரை கிண்டல் செய்யும் விதமாக மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.