[X] Close

சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் நாளை தீர்ப்பு இல்லை

No-Judgement-on-Tomorrow-in-Jayalalithaa-disproportionate-assets-case

ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வர் மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் நாளை தீர்ப்பு இல்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன.

சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் கடந்த 6-ஆம் தேதி அறிவித்திருந்தது. இதனிடையே, தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து ஆட்சியமைக்க அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா உரிமை கோரியுள்ளார்.

சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் நாளை தீர்ப்பு வரலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் இவ்வழக்கில் நாளை தீர்ப்பு இல்லை என்பது உறுதியாகி உள்ளது. உச்சநீதிமன்றத்தில் எந்தெந்த வழக்குகள் அடுத்தநாள் விசாரணைக்கு வரும் என்பது குறித்த தகவல்கள் அதற்கு முந்தைய நாளிலே தெரிந்துவிடும். அதன் அடிப்படையில், சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு நாளை விசாரணைக்கு வரவில்லை எனத் தெரிய வந்துள்ளது. அடுத்த நாட்களான சனி- ஞாயிற்றுக்கிழமை உச்சநீதிமன்றத்திற்கு விடுமுறை நாள். ஆகையால், அடுத்த வாரம் சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close