Published : 04,Oct 2017 03:00 AM

திருமணமான 18 நாளில் காய்ச்சலால் உயிரிழந்த காவலர்

Police-man-dead-due-to-fever-at-Virudhunagar

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே திருமணமாகி 18 நாட்களே ஆன தமிழ்நாடு காவல்துறை காவலர் ஒருவர் காய்ச்சலால் உயிரிழந்தார்.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் டெங்கு பாதிப்பால் கல்லூரி மாணவிகள் இருவர் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே திருமணமாகி 18 நாட்களே ஆன தமிழ்நாடு காவல்துறை காவலர் ஒருவர் காய்ச்சலால் உயிரிழந்துள்ளார். உலக்குடி கிராமத்தைச் சேர்ந்த தங்கசாமி என்பவருக்கு கடந்த 25ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், 3 நாட்களுக்கு முன் காய்ச்சல் ஏற்பட்டதால் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் குறையாததால் மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த தங்கசாமியின் உடல் காவல்துறை மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்