[X] Close

துரைமுருகன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி

Dmk-former-minister-Durai-Murugan-admitted-in-chennai-apollo-hospital

திமுக முதன்மை செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவருமான துரைமுருகனுக்கு திடீரென உடல் நலக்குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சளி தொந்தரவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சென்னை ஆயிரம் விளக்கு கிரீம் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தொடர் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முன்னதாக தமிழக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சில தினங்களுக்கு முன்பு அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எஸ்.பி.வேலுமணியை தொடர்ந்து தற்போது துரைமுருகன் உடல்நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close