முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியுள்ளது.
2011-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை ஜெயலலிதா அரசில் போக்குவரத்துத்துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தபோது, 16 பேரிடம் தமிழ்நாடு போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி 95 லட்ச ரூபாயை வாங்கிக்கொண்டு ஆனால் வேலை வாங்கித் தராமல் மோசடி செய்துள்ளதாக சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த கணேஷ்குமார் என்பவர் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில், மத்திய குற்றப்பிரிவு போலீஸார், செந்தில் பாலாஜி உள்ளிட்ட மூன்று பேர் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குப் பதிந்துள்ளனர்.
இந்நிலையில் இந்தப் புகாரில் முகாந்திரம் இல்லை என்பதால் தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் எனக்கூறி செந்தில்பாலாஜி, தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது என ஆட்சேபணை தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கினார்.
தினந்தோறும் மத்திய குற்றப்பிரிவு காவல்துறை விசாரணை அதிகாரி முன் காலை 9 மணிக்கு செந்தில் பாலாஜி ஆஜராக வேண்டும் எனும் நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கப்பட்டது. இவ்வழக்கில் அன்னராஜ் என்பவருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. ஏற்கனவே இவ்வழக்கில் செந்தில்பாலாஜி தன்னைக் கைது செய்ய தடை பெற்றிருந்த நிலையில், இன்று அவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியுள்ளது.
Loading More post
உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோல் விற்கும் நாடு எது?
குரங்கு அம்மை அறிகுறியா? நிச்சயம் இதனை செய்யுங்கள் - சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி உத்தரவு
முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ்.. அதிக முறை கடைசி இடத்தை பிடித்த அணி எது?
செம்மலை, ஜெயக்குமார்.., மாநிலங்களவை அதிமுக வேட்பாளர்கள் தேர்வில் தொடரும் இழுபறி!
2 வருடமாக அவதிப்பட்ட மகன்; தியாக ரூபத்தில் வந்த தாய் - ரோபோ உதவியுடன் மருத்துவர்கள் சாதனை
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்