Published : 03,Oct 2017 07:26 AM

ஸ்டாலின் திமுகவிலேயே பெரும்பான்மையை இழந்துவிடுவார்: ஜெயக்குமார்

TN-Minister-Jayakumar-slams-MKStain

திமுகவுக்குள் ரகசிய வாக்கெடுப்பு நடத்தினால் அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பெரும்பான்மையை இழக்க நேரிடும் என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், திமுக சட்டமன்ற உறுப்பினர்களே தேர்தலை விரும்பவில்லை என கூறினார். திமுகவை பொறுத்த வரையில் முன்னாள் அமைச்சர்கள்தான் தேர்தலை விரும்புவதாகவும் தற்போதுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் தேர்தலை விரும்பவில்லை என்றார். திமுகவுக்குள் ரகசிய வாக்கெடுப்பு நடத்தினால் அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பெரும்பான்மையை இழக்க நேரிடும் என ஜெயக்குமார் விமர்சித்தார். சசிகலா குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார், சசிகலா பரோலில் வந்தால் அதிமுகவில் எந்த தாக்கமும் ஏற்படாது என கூறினார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்