[X] Close

விடுமுறை முடிந்தது: பெருங்களத்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல்

Heavy-Traffic-in-Chennai-Perungalathur

சொந்த ஊருக்குச் சென்றவர்கள், நான்கு நாட்கள் விடுமுறை முடிந்து சென்னைக்கு திரும்பியதால் பெருங்களத்தூர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தொடர் விடுமுறைக்காக சொந்த ஊருக்குச் சென்ற சென்னை வாழ் மக்கள் இன்று பணி நாள் என்பதால் சென்னை திரும்புகின்றனர். அதனால் வண்டலூர், பெருங்களத்தூர் பகுதியில் ஆயிரக்கணக்கான அரசு மற்றும் தனியார் பேருந்துகள், வாகனங்கள் வெளி மாவட்டங்களிலிருந்து வந்தவண்ணம் இருந்தன. எனவே இன்று அதிகாலை முதல் அப்பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

போக்குவரத்துத்துறையினர் மற்றும் காவல்துறையினரும் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். சென்னை நகருக்குள் நெரிசல் ஏற்படுவதை தடுக்க பேருந்துகள் அனைத்தும் மதுரவாயல் பைபாஸ் வழியாக கோயம்பேடுக்கு திருப்பிவிடப்பட்டன. இதனால் கோயம்பேட்டிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


Advertisement

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close