Published : 02,Oct 2017 06:43 AM

குடிபோதையில் தாறுமாறு டிரைவிங்: கான்ஸ்டபிள் கைது

mumbai-cops-caught-drunk-on-duty

மும்பையில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய போலீஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார்.

மும்பை நகரின் கந்திவலி பகுதியில் இரண்டு காவலர்கள் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, பணியில் இருந்த போதே அவர்கள் மதுபோதையில் இருந்துள்ளனர். மேலும், போதையில் இருந்த கான்ஸ்டபிள் வெஸ்டன் எக்ஸ்பிரஸ் சாலையில் தாறுமாறாக வாகனம் ஓட்டியுள்ளார். இதனையடுத்து, அப்பகுதி வாசிகள் வாகனத்தை தடுத்து நிறுத்தியுள்ளனர். பின்னர், இருவரும் குடிபோதையில் இருந்ததை கண்ட பொதுமக்கள் காவல்நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளனர். மேலும், தங்களிடம் இருந்த செல்போன்களில் குடிபோதையில் இருந்த காவலர்களை படமெடுத்துள்ளனர். இது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, வாகனம் ஓட்டிய கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்