Published : 02,Oct 2017 03:28 AM
காந்தியின் கொள்கைகள் ஊக்கமாக உள்ளது: மோடி

தேசப் பிதா மகாத்மா காந்தியின் 149வது பிறந்தநாளை ஒட்டி அவரது நினைவிடத்தில் குடியரசு துணை தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
மகாத்மா காந்தியின் பிறந்தநாள் விழா, நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பாரதிய ஜனதா மூத்த தலைவர் எல்.கே. அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். மகாத்மா காந்தியை வணங்குவதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, மகாத்மாவின் கொள்கைகள் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்களுக்கு ஊக்கமாக அமைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.