[X] Close

கோலிக்கு தலைவலியை தரும் விஷயம் இது!

selection-dilemma-is-always-good-headache-Virat-Kohli

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று 4-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது

நாக்பூரில் நடைபெற்ற போட்டியில், முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் இழப்புக்கு 242 ரன்கள் எடுத்திருந்தது. 243 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 42.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 125 ரன்கள் எடுத்தார். 
போட்டிக்குப் பிறகு பேசிய இந்திய கேப்டன் விராத் கோலி, ‘பல்வேறு நெருக்கடிகளில் இருந்து மீண்டு, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறோம். புவனேஷ்வர்குமாரும் பும்ராவும் சிறப்பாக பந்துவீசினார்கள்.  உமேஷ், ஷமிக்கும் வாய்ப்புக் கொடுக்கப்பட்டது. அவர்களும் நன்றாக பங்களிப்பு செய்தார்கள். மிடில் ஓவர்களில் குல்தீப், சாஹல் சுழற்பந்துவீச்சும் அருமை. ஹர்திக் பாண்டியா இந்திய அணியின் பெரிய சொத்து. ஆடும் லெவனில் யாரைச் சேர்ப்பது என்பது கேப்டனாக எனக்கு தலைவலிதான்.
இருந்தாலும் அதுவும் நல்ல விஷயம்தான். இந்த தொடரில் பல நல்ல விஷயங்கள் நடந்திருக்கின்றன’ என்றார்.


 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close