[X] Close

புரோ கபடி லீக்: மும்பை அணியை எதிர்கொள்ளும் தமிழ் தலைவாஸ்

tamilthalaivas-team-met-with-mumbai-in-pro-kabadi-league-chennai

புரோ கபடி லீக் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி, யுனைடெட் மும்பை அணியை எதிர்த்து விளையாடுகிறது.

புரோ கபடி லீக் தொடரில் இன்று சென்னையில் நடைபெறும் தமிழ் தலைவாஸ் அணி, மும்பை அணியை எதிர்கொள்கிறது. இந்தப்போட்டி இரவு 9 மணியளவில் தொடங்குகிறது. முன்னதாக இரவு 8 மணிக்குத் தொடங்கும் மற்றொரு ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் அணி, கொல்கத்தாவைச் சேர்ந்த பெங்கால் வாரியர்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது.

முன்னதாக செப்டம்பர் 29 ஆம் தேதி சென்னையில் புனே அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் முதல் பாதியில் தமிழ் தலைவாஸ் அணி ஒரு புள்ளி முன்னிலை பெற்றிருந்தது. இரண்டாம் பாதியில் புனேவின் புனேரி பால்டன் அணி வீரர்கள் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முடிவில் 33-20 ‌என்ற புள்ளிகள் கணக்கில் புனே அணி வெற்றியை வசமாக்கியது. சொந்த‌ மண்ணில் நடைபெற்ற முதல் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி தோல்வி அடைந்தது‌ ரசிகர்களை ஏமாற்றம் அடையச் செய்தது. துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம், ‌தமிழ் தலைவாஸ் அணியின் உரிமையாளர் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர், போட்டியை நேரில் பார்த்து ரசித்தனர்.


Advertisement

செப்டம்பர் 30 ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் தமிழ் தலைவாஸ் அணியும் ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் அணியும் மோதின. இந்தப் போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் அணி 27-26 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது. தமிழ் தலைவாஸ் அணி ஒரு புள்ளி வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டன் அஜய் தாக்கூர் 13 புள்ளிகளும், ஜெய்ப்பூர் அணியில் துஷார் பாட்டீல் 7 புள்ளிகளும் எடுத்தனர்.


Advertisement

Advertisement
[X] Close